இடைத்தேர்தல் முடிவுகளை ஏற்கிறோம்…! காங். மூத்த தலைவர் டி.கே. சிவகுமார் பேட்டி

பெங்களூரு: கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாக அக்கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பெருத்த எதிர்பார்ப்புடன் நடந்து முடிந்தது. அதன் முடிவுகளும் இன்று அறிவிக்கப்பட்டன.

எதிர்பாராத விதமாக,பாஜக 3ல் 2 பங்கு தொகுதிகளில் வென்றிருக்கிறது. பெரும்பான்மைக்கு தேவையான 6 தொகுதிகளை  கடந்துள்ளது. 11 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

இந்த தோல்வி காங். வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது 15 தொகுதிகளின் வாக்காளர்களின் முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

காங்கிரஸ் கட்சியானது தமது தோல்வியை ஒப்புக் கொள்கிறது. ஆனால், இந்த தேர்தலில் குறை வைத்திருப்பவர்களை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் காங்கிரஸ் சோர்வடையாது. தொடர்ந்து மக்கள் களத்தில் செயல்படுவோம் என்றார்.