சென்னை:

ணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டெடுக்கும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. குழந்தை உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கப்பட்ட டிரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது

இந்த நிலையில், குழந்தையின் பெற்றோர்கள் துடிப்பதைப் போல நாமும் துடிக்கிறோம் என்றுதிமுக தலைவர்  முக ஸ்டாலின் டிவிட் பதிவிட்டு உள்ளார்.

மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டெடுக்கும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. சுமார் 17 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் மீட்டெடுக்க முடியாமல் தமிழகத்தை சேர்ந்த மீட்புக் குழுவினர் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், சிறுவனை மீட்க 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு நவீன கருவிகளுடன் நடுகட்டுப்பட்டி வந்து, மீட்டெடுக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. தற்போது தேசிய மீட்பு படையினர் குழந்தையை மீட்டெடுக்கும் முயற்சியில் களமிறங்கி உள்ளனர்.

இந்த நிலையில், இந்த துயர சம்பவம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில்,   குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும். அவரது குடும்பம் துடிப்பதைப் போல் நாமும் துடிக்கிறோம். அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும். தொடர்ச்சியாக இதுபோன்ற சோக நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி  வேண்டும்! என்று கூறி உள்ளார்.