டெல்லி:

ச்சநீதி மன்றம் இன்று வழங்கியுள்ள அயோத்தி வழக்கின் தீர்ப்பை வரவேற்கிறோம் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின்  தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார்.

ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தில் உள்ள ராமஜென்ம பூமி விவகாரம் பல தசாப்தங்களாக  இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே நீடித்து வருகிறது. இது தொடர்பாக வழக்கை உச்சநீதி மன்றம் விசாரித்து, இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது.

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை   வரவேற்பதாக ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.  பல தசாப்தங்களாக நடந்து கொண்டிருந்த இந்த வழக்கில் நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இது வெற்றி அல்லது இழப்பாக கருதக்கூடாது. சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதற்கான அனைவரின் முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்தியஸ்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை. தாமதமானாலும் சிறந்த தீர்ப்பு கிடைத்துள்ளது. சர்ச்சைக்குரிய நிலம் தற்போது அரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இருந்து வரும் மோதலுக்குத் தீர்வு வேண்டும் என விரும்பினோம். தற்போது அந்தத் தீர்வு கிடைத்துள்ளது. எங்கள் விருப்பம் நிறைவேறியுள்ளது.

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை யாரும்ம் வெற்றியாகவோ, தோல்வியாகவோ கருத வேண்டாம். கடந்த காலங்களில் நடந்த பிரச்சினைகளை மறப்போம். அனைவரும் ஒன்றிணைந்து ராமர் கோயில் கட்டுவோம்.

இவ்வாறு மோகன் பகவத் கூறி உள்ளார்.