Random image

” உங்களை போலவே நாங்களும் தோல்வியை எண்ணி வருந்துகிறோம் “ – ஷிகர் தவான்

இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு ரசிகர்களை போல்வே தாங்களும் வருந்துவதாக இந்திய அணியின் வீரர் ஷிக்கர் தவான் தெரிவித்துள்ளார். நாட்டிற்காக முடிந்த அளவு முயற்சித்து விளையாடி வருகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

dawan

இங்கிலாந்துக்கு சுர்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து 2-0 என முன்னிலை பெற்றது. அடுத்து நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் எதிர்ப்பாத்தப்படி இந்தியா வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்திற்கு பதிலடி கொடுத்து வெற்றிப்பெற்றனர். இதையடுத்து 3வது டெஸ்ட் போட்டியின் முடிவில் இந்தியா 1-2 என இருந்தது.

இதனை தொடர்ந்து 4வது டெஸ்ட் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. வெற்றியை தீர்மானிக்கும் இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஆரம்த்திலே ஏமாற்றத்தை அளித்தனர். அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அணியின் வெற்றியை இங்கிலாந்திடம் விட்டனர். இதில் வெற்றிப்பெற்ற நிலையில் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என கைப்பற்றியது. இரு அணிகளும் மோது கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெற உள்ளது.

shikar

இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங்கை இந்தியாவின் முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். இத்தகைய விமர்சனங்களுக்கு தொடக்க ஆட்டக்காரர் ஷிக்கர் தவான் தனது இன்ஸ்டகிராமில் பதிலளித்துள்ளார். அவரின் பதிவில், “ நான்காவது டெஸ்டில் தோல்வியை சந்தித்த நாளில், உங்களைப் போலவே நாங்களும் வருந்தினோம். தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது தான் அவசியம். நாட்டுக்காக எங்களால் முடிந்த அளவு போராடினோம். ஆனால் தோல்வியடைந்தோம். அடுத்த போட்டிக்கு தயாராக முந்தைய தோல்வியில் இருந்து வெளியே வருவது அவசியம். தொடர்ந்து கடினமாக பயிற்சி எடுத்து வருகிறோம். எங்களுக்கு இதுவரை ஆதரவு அளித்து வரும் உங்களுக்கு நன்றி “ என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.