விஷால் அலுவலகத்தில் நடக்கும் சோதனைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை!! ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரி விளக்கம்

சென்னை:

நடிகர் விஷாலுக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம் சென்னை வடபழனியில் உள்ளது.

இந்த அலுவலகத்தில் மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். திரைப்பட நிறுவனத்தின் வரவு செலவு கணக்கு வழக்குகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். சுமார் 3 மணி நேரம் இது நீடித்தது.

இந்நிலையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு இணை இயக்குனர் ராஜசேகர் கூறுகையில், ‘‘ சென்னையில் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கும் நடிகர் விஷாலுக்கும் தொடர்பு இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.