பெங்களூரு:

ர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி வரை 24 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆட்சியை பிடிக்க பாஜ, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை ஜனதாதள கட்சி தலைவர் தேவகவுடா தனது மனைவியுடன் வந்து வாக்கை செலுத்தினார். அப்போது, கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சி அமைக்கும் சக்தியாக உருவெடுக்கும் என்று கூறினார்.

இந்நிலையில், அவரது மகனும், முன்னாள் முதல்வருமான எஸ்.டி.குமாரசாமி தனது மனைவி அனிதாவுடன் ரமனா கார வாக்குச் சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து பேசிய குமாரசாமி,  ஜனதாதளம், எதிர்பார்ப்பதை விட அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறும் என்று நம்புவதாக தெரிவித்தார்.