டோக்கியோ: அடுத்தாண்டு கோடைகாலத்தில், ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் ஜப்பான் தீவிரமாக உள்ளதாக, அந்நாட்டின் புதிய பிரதமர் யோஷிடே சுகா தெரிவித்துள்ளார்.

இந்தாண்டின் மத்தியப் பகுதியில் நடைபெற்றிருக்க வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக், கொரோனா பரவல் காரணமாக அடுத்தாண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேசமயம், அடுத்தாண்டும் ஒலிம்பிக் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், முதன்முறையாக ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றிய யோஷிடே சுஹா, “அடுத்தாண்டு கோடையில், டோக்கியோவில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் ஜப்பான் நாடு தீர்மானமாக உள்ளது.

நோய் தொற்றை மனித இனம் வென்றுவிட்டது என்பதன் அடையாளமாக ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும். பாதுகாப்பான மற்றும் ஆபத்தில்லாத ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள உங்களை வரவேற்க நான் தயங்க மாட்டேன்” என்றுள்ளார்.