சிங்கத்தை எதிர்த்து போராட தயார்: பாக். தேர்தலில் களமிறங்கி உள்ள இந்து பெண்
கராச்சி:
பாகிஸ்தானில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இந்து பெண் ஒருவர் முதன்முறையாக களமிறங்கி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சிங்கத்தை எதிர்த்து போராட தயார் என்று கூறி உள்ளார். அவரது தைரியமான முடிவு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நடைபெற்ற உள்ள மாகாண சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்து பெண்ணின் பெயர் சுனிதா பர்மார். மெஹ்வார் என்ற மைனாரிட்டி இனத்தை சேர்ந்தவர்.
பாகிஸ்தானில் இந்த மாதம் 25ந்தேதி நடைபெற உள்ள மகாண சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கி உள்ளார். இந்துக்கள் அதிகமாக வசித்து வரும் தர்பார்க்ர் மாவட்டத்தில் உள்ள சிந்த் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக களத்தில் குதித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பர்மார், பாகிஸ்தானில் முந்தைய அரசு மக்களுக்காக எந்தவித நற்பணிகளையும் செய்ய வில்லை என்றும், 21-ம் நூற்றாண்டில் கூட, அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் பெண்களுக்கு முறையான கல்வி நிறுவனங்கள் கிடையாது என்று குற்றம் சாட்டினார்.
“பெண்களே பலவீனமானவர்களாகவும், தாழ்ந்தவர்களாகவும் இருக்கும் நாட்கள் மாறி வருகிறது என்றும், தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று நம்பிக்கை தெரி வித்தவர், இது 21ம் நூற்றாண்டாகும்… நாங்கள் சிங்கத்தை எதிர்த்து போராட தயாராக உள்ளோம் என்றும் கூறி உள்ளார்.
பெண்கள் முன்னேற்றம் மற்றும் சுகாதார வசதிகள உயர்த்த பாடுபடுவதாகவும், “பெண்ணின் கல்வியை நான் நம்புகிறேன், பெண்களுக்கு வலுவையும், வாழ்வில் செழுமையும் பெற ஒரே வழி கல்விதான். அதைற்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்வேன்… அதை செய்ய ஒரே வழி இதுதான் என்றும் கூறி உள்ளார்.
கடந்த ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில், தர்பார்கர் மாவட்ட மொத்த மக்கள் தொகையான 1.6 மில்லியனில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்துக்கள் என்பது தெரிய வந்ததுள்ளது. இதன் காரணமாக சுனிதா பர்மார் வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது.