தனுஷ் உடன் இணையும் சத்யஜோதி பிலிம்ஸ்! 2 படங்கள் தயாரிக்க திட்டம்

பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நடிகர் தனுசை வைத்து 2 படங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகள் முடிவடைந்த நிலையில், அதற்கான அறிவிப்பை சத்யஜோதி பிலிம்ஸ் வெளியிட்டு உள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ்  தயாரித்துள்ள நடிகர் அஜித்தின் விஸ்வாசம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லர்,  ரஜினியின் பேட்டைவிட அதிக அளவு வரவேற்பு பெற்று சமூக வலைதளங்களில் டிரென்டிங்காக உள்ளது.

இந்த நிலையில்,  நடிகர் தனுசை வைத்து 2 படங்கள் தயாரிக்கப்போவதாக சத்ய ஜோதி பிலிம்ஸ் அறிவித்து உள்ளது.

துரை செந்தில்குமார், ராட்சசன் இயக்குநர் ராம்குமார் ஆகியோர் தனுசின் படங்களை இயக்க உள்ளார்கள். ஒரு படத்துக்கு இசை டியோ விவேக்  என்றும், மற்றொரு படத்துக்கு மெர்வின் இசை அமைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.