பாஜவின் சித்தாந்தத்தை எதிர்த்து போராடுவோம்! காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு

டில்லி:

நாம் ஒரு அரசியல் கட்சியை எதிர்த்து போராடவில்லை, ஆனால், சிந்ததாந்ததையே எதிர்த்து போராடுகிறோம்: காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இதில் ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்ற சோனியா காந்தி  காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், எம்.பி.க்கள் மத்தியல் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, நாம் ஒரு அரசியல் கட்சியை மட்டும் எதிர்த்து போராட வில்லை. பாஜகவின் சிந்தாந்ததையே  எதிர்த்து போராடுகிறோம் என்று கூறினார். கடந்த  தேர்தலின்போது  44 எம்.பிக்களுடன் பாராளுமன்றத்தில் சிறப்பாக செயலாற்றியதை நினைவு கூர்ந்தவர் தற்போது 52  எம்.பி.க்கள் உள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

17வது மக்களவைக்கான  தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த நிலையில், 52 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், மாநிலங்களில்  மட்டுமே காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று டில்லியில் நடைபெற்றது. இதில், சோனியா காந்தி  நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி