ஆளும் பாஜகவை தோற்கடிக்க ஒன்றிணைகிறோம் : ராகுல் காந்தி

டில்லி

ற்போது ஆட்சி புரியும் பாஜகவை தோற்கடிக்க சந்திரபாபு நாயுடுவுடன் ஒன்றிணைவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்க கூட்டணை அமைக்க முயன்று வருகிறது. இந்த கூட்டணியை அமைக்க தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு டில்லி சென்று பல அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்தார்.

அந்த வரிசையில் அவர் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தை முடிவில் இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அந்த சந்திப்பில் ராகுல் காந்தி, “எங்களுடைய இந்த சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இந்தியாவின் பெருமை மிகு அமைப்புகளின் மாண்மை காக்கவும் அதன் மூலம் ஜனநாயகத்தை காக்கவும் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளோம்.

பேச்சுவார்த்தையின் போது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் குறித்து மட்டும் பேசினோம். நாங்கள் பாஜகவை தோற்கடித்து ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். நீங்கள் பத்திரிகையாளர்கள் என்பதால் பரபரப்பு செய்திகளை எதிர் பார்க்கலாம். ஆனால் நாங்கள் சவால்களை சந்தித்து வெற்றி அடைவதில் மட்டுமே குறியாக உள்ளோம்” என தெரிவித்தார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, “ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் நாட்டைக் காக்கவும் நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். இதை நாங்கள் பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை ஒன்று சேர்க்கும் பொதுத்தளமாக கருது கிறோம்.

தற்போது நாட்டில் நடப்பது என்ன என்பதை கவனத்தில் கொண்டுள்ளோம். இந்த இணைப்பு குறித்து திமுக தலைவ்ர் மு க ஸ்டாலினுடன் பேச உள்ளோம். அதன் பிறகு அவர்களும் எங்களுடன் இணைவார்கள்” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.