‘நாங்க நெருங்கி வரலை…..:’ திருமாவளவன் அவசர பதில்

--

சென்னை:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எங்களோடு நெருங்கி வருகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார்  கூறியதை தொடர்ந்து,  நாங்க நெருங்கி வரவில்லை  என்று திருமாவளவன் அவசரம் அவசரமாக பதில் அளித்துள்ளார்.

இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர் விழாவுக்கு தன்னை  அழைத்தால் தானும் பங்கேற்பேன் என தொல்.திருமாவளவன் கூறியிருப்பது… அவர் அதிமுக  பக்கம் நெருங்கி வருவதையே இது காட்டுகிறது என்று கொளுத்திப் போட்டார்.

இது தமிழக அரசியல் கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக அவசரம் அவசரமாக திருமாவளவன் பதில் அளித்தார்.

அப்போது, அதிமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி நெருங்கி வரவில்லை என்று மறுத்த திருமாவளவன் எம்ஜிஆர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதால் அவரது விழாவில் பங்கேற்க ஆர்வம் காட்டினேன். அமைச்சர் ஜெயக்குமார் சொல்வதுபோல் கட்சி ரீதியாக எந்த கருத்தும் சொல்லவில்லை என விளக்கம் அளித்தார்.

தொல் திருமாவளவனின் அவசர பதில் அரசியல் கட்சியினரிடையே சிரிப்பை வரவழைத்துள்ளது.