பொருளாளர் பதவிக்கு நாங்கள் போட்டியிடவில்லை! கனிமொழி, ராசா

சென்னை: திமுகவின் பொருளாளர் பதவிக்கு நாங்கள் போட்டியிடவில்லை என்று  கனிமொழி, ராசா அறிவித்து உள்ளனர்.

காலியாக திமுக பொருளாளர் பதவி மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு திமுக தலைமை தேர்தல் அறிவித்து உள்ளது. அதன்படி, இன்றுமுதல் வேட்புமனு பெற்று தாக்கல் செய்யலாம் என் றும், 5ந்தேதி மாலை 4 மணிக்கு இறுதிப்பட்டியல் வெளியிடப்படும் என்றும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளதார்.

முன்னதாக, திமுக பொதுக்குழுக் கூட்டம், 09-09-2020 (புதன்கிழமை) அன்று காலை 10 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும்” என்றும், அன்றைய தினம், கட்சியின் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் கூறியிருந்தார்.

திமுக தலைமைக்கும், கலைஞர் குடும்பத்துக்கும் விசுவாசமாக இருந்து வரும்,  தற்போதைய மக்களவை குழு தலைவராக உள்ள  டி.ஆர் பாலுவை பொருளாளராக தேர்ந்தெடுக்க கோபாலபுரம் வட்டாரம் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.