மும்பை

சிவ்சேனா கட்சிக்கு முதல்வர் பதவி அளிப்பது குறித்து பாஜக தலைமை எந்த முடிவும் எடுக்கவில்லை என அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பாஜக மற்றும் சிவசேனா கட்சியின் கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது.   அமைச்சரவையில் சரி பாதி பங்கும் முதல்வர் பதவியும் தங்கள் கட்சிக்குத் தேவை என சிவசேனா கேட்டு வருகிறது.  அதற்கு பாஜகவினர் ஒப்புக் கொள்ளாமல் உள்ளனர்

இதற்கிடையே பாஜக அமைச்சரவையில் சரி பாதி பங்களிக்கத் தயாராக உள்ளதாகவும் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.    ஆனால் சிவசேனா முதல்வர் பதவியையும் பங்கு போட்டாக வேண்டும் என்னும் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

இந்நிலையில் பாஜக தலைவரும் தற்போதைய மகாராஷ்டிர முதல்வருமான தேவேந்திர ஃபட்நாவிஸ், “எங்கள் கட்சி தலைமை சிவசேனாவுக்கு முதல்வர் பதவி அளிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.   அத்துடன் இது குறித்து எந்த ஃபார்முலாவும் உருவாக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.