சிறையில் ஜெ.விடம் கைரேகை வாங்கவில்லையாம்! கர்நாடக சிறை அதிகாரி தகவல்

சென்னை,

ஜெயலலிதா கைரேகை வழக்கில் பெங்களூரு பரபரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரி, ஆவனங்களுடன் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இன்று ஐகோர்ட்டில் ஆஜரான  பெங்களூரு சிறை அதிகாரி,  மோகன்ராஜ்,  சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைசென்றபோது அவரிடம் கைரேகை பெறவில்லை என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

ஜெயலலிதா கைரேகை தொடர்பான  வழக்கில் டிச.8ந்தேதி  பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் ஆஜராக வேண்டும்  என சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நடைபெற்ற திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்த லில், வேட்புமனு  தாக்கல் செய்யும் படிவத்தில் ஜெயலலிதா கைரேகை வைத்தது தொடர்பான விசாரணைக்கு பெங்களூர் பரபரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பாளர் ஆஜராக வேண்டும் என்று  கடந்த நவம்பர் 24ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது சென்னை   ஐகோர்ட்டு அதிரடியாக  உத்தரவிட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே, சென்னை மருத்துவர் பாலாஜி மற்றும் தேர்தல் ஆணையர்கர்கள் விளக்கம் அளித்துள்ள நிலையில், திமுக வழக்கறிஞரின் வேண்டுகோளை ஏற்று,

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டபோது,  ஜெயலலிதாவிடம் இருந்து பெறப்பட்ட கைரேகை உள்பட ஆவனங்களை தாக்கல் செய்ய பெங்களூரு பரபரப்பன அக்ரஹாச சிறை கண்காணிப்பாள ருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி, இன்று பெங்களூரு சிறை அதிகாரி மோகன்ராஜ் உயர்நீதி மன்றத்திற்கு வருகை தந்தார். இன்று பிற்பகலில் நடைபெற்ற விசாரணையின்போது ஆஜரான அவர், பெங்களூரு சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டபோது அவரிடம் கைரேகை பெறவில்லை என்று கூறினார்.

கர்நாடக சிறை அதிகாரியின் இந்த விளக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக  சிறையில் அடைக்கப்படும் ஒருவரிடம் இருந்து அவரது கைரேகை, கையெழுத்து உள்பட அங்க அடையாளங்கள் அதற்கான பதிவேட்டில் பதிவு செய்யப்படுவது நடைமுறை.

ஆனால், கர்நாடக பரப்பன அக்ரஹார சிறை அதிகாரி, ஜெ.விடம் இருந்து கைரேகை பெறவில்லை என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

You may have missed