நாங்க யாரும் பீட்டா இல்லை: ரஜினி குடும்பமே அறிவிப்பு!

சென்னை,

ங்கள் குடும்பத்தினர் யாரும் பீட்டாவில் உறுப்பினராக இல்லை என்று ரஜினி குடும்பத்தினர் அறிவித்து உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள்கள்  ஐஸ்வர்யா, சௌந்தர்யா இருவரும் ஜல்லிக்கட்டை எதிர்க்கிறார்கள் என்றும், பீட்டா அமைப்பின் உறுப்பினர்கள் என்றும் பலமுறை செய்திகள் வெளிவந்தன.

சமீபத்தில் சௌந்தர்யா, விலங்குகல் நல வாரியத்தின் தூதராக பதவியும் பெற்றார். அப்போதெல்லாம் இது குறித்து அவர்கள்  பெரிய அளவில் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.

ஐஸ்வர்யாவின் கணவர் நடிகர் தனுஷ், கடந்த வருடம், ஜல்லிக்கட்டை எதிர்த்து கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியானது. ஆரம்பத்தில் அமைதியாக இருந்த அவர், பிறகு, தான் ஜல்லிக்கட்டை ஆதரிப்பதாக அறிவித்தார்.

தற்போது ஜல்லிக்கட்டை ஆதரித்து பெரும் போராட்டங்கள் நடந்துவருவதை அடுத்து, நடிகர் ரஜினிகாந்த், ஜல்லிக்கட்டை ஆதரிப்பதாக பேசினார்.

நேற்று, சௌந்தர்யாவும் தான் பீட்டா உறுப்பினர் அல்ல என்றும் ஜல்லிக்கட்டை ஆதரிப்பதாகவும் ட்விட்டினார். இந்த நிலையில், அவரது அக்கா ஐஸ்வர்யாவும், இதே கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் குடும்பம் தமிழகத்தில் நடக்கும் இந்த மாபெரும் புரட்சியில் ஈடுபட்டுள்ள அனைத்து தமிழர்களுக்கும் முழு ஆதரவு தெரிவிக்கிறது, பெருமைப்படுகிறது.

நானோ,  எங்கள் குடும்பத்தாரோ பீட்டா அமைப்பின் உறுப்பினர் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

இவரது கணவரும் நடிகருமானர் தனுஷும் ஜல்லிக்கட்டை ஆதரித்து சமீபத்தில் மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி