நெட்டிசன்:
 இங்கிலாந்து ரவி சுந்தரம்(   Ravi Sundaram) அவர்களின் முகநூல் பதிவு
இத்தனை அக்கிரம அநியாயங்களையும் தாங்கி கொண்டு இந்திய சாமான்யன் பொறுமையுடன்
வரிசையில் நின்று தன் முறை வருவதற்காக
காத்திருப்பது வியப்பையே அளிக்கிறது.
111
மேற்கு நாடுகளுக்கும் கீழை நாடுகளுக்கும்
இது ஒரு மிகப்பெரிய வித்தியாசம்.
மேற்கு நாடுகளில் பணம் பெருக பெருக அடுத்தவருக்கு கொடுத்து பெருமை சேர்ப்பார்கள்.
ஏழ்மை பெருக பெருக மனிதர்கள் சண்டைகளே
மிகுந்து போகும். ஒரு பயலை கிட்ட சேர்க்க மாட்டான்.
நம்மூரில் எல்லாம் தலை கீழ்..
பணம் சேர சேர ஒரு பயலுக்கு ஒத்தை காசு கொடுக்காம வீடு மேலே வீடு கட்டி நகை மேல நகை வாங்கி ஒருத்தனை கிட்ட சேர்க்காம வாழ்வான்.
ஆனா ஏழ்மை காலங்களில் நேர் மாறு. மதம் கிடையாது. ஜாதி கிடையாது. ஒரு வாய் சோறு கிடைச்சா அதையும் பகிர்ந்தே உண்ணுவான்.
இப்ப கூட பாருங்க..ஏழைகள் தங்களுக்குள்
பகிர்ந்து கொண்டு புலம்பத்தான் செய்கிறார்.
அதாலொழிய இந்த நிலைமைக்கு காரணமான
அரசையோ அரசியல்வாதிகளையோ ஒருவரும்
நிரந்தரமாக பகைப்பதில்லை.
இந்த கலாட்டா மற்ற நாடுகளில் நடந்திருந்தால்
இந்நேரம் கலவரம் வெடித்திருக்கும். போலிஸ் என்ன…ராணுவம் தேவைப்பட்டிருக்கும்.
தெருவில் வந்து அடித்து கிழிச்சு நார் நாராக
தொங்க விடுவார்கள்.
மக்களை இப்படி வீதியில் நிறுத்தியதற்கு காரணமான கட்சி அடுத்த 50 வருடத்திற்கு
அரசியலிலேயே இருக்க முடியாது.
நாம் முட்டாள்கள் மட்டுமல்ல. கோழைகளும் கூட…