டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி,,  மத்தியஅரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

வேளாண் சட்டங்கள்  மற்றும் விவசாயிகள் போராட்டம்  தொடர்பான வழக்கு நேற்று முதல் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நேற்றைய விசாரணையின்போது, தலைமைநீதிபதி எஸ்.ஏ.பாப்டே,   மத்திய அரசிடம்,  சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கிறீர்களா அல்லது நாங்கள் செய்யட்டுமா என்பது  அட்டர்னி ஜெனரலிடம் கேள்வி எழுப்பினர்.

இதை கடைசி சந்தர்ப்பத்தை நாங்கள் உங்களிடம் கேட்கிறோம் என்றவர்க,ள  நீங்கள் பதிலளிக்கவில்லை நாங்களே முடிவு செய்வோம்என்றதுடன்,  இது தொடர்பாககுழு அமைத்து,  சட்டங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து தீர்க்கலாம் என்றதுடன்,  வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஒரு வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்தியஅரசு விவசாயிகள் தரப்பில் காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றது. விவசாயிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்  எம்.எல். சர்மா கூறுகிறார், விவசாயிகள் பல நபர்கள்  அரசு கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஆனால், முக்கியமான நபரான  பிரதமர் வரவில்லை என்று குற்றம் சாட்டினார்.

அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, பிரதமரை செல்லுமாறு நாங்கள் கேட்க முடியாது. இந்த வழக்கில் அவர் ஒரு கட்சி அல்ல என்று தெரிவித்துதடன், நாங்கள் இந்த பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை உருவாக்குகிறோம் என்றவர்,  இந்த வழக்கில் நீதித்துறை செயல்பாட்டின் ஒரு பகுதியாக இந்த குழு இருக்கும் என்று தெரிவித்துடன், வேளாண் சட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறினார்.

வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதிக்க முடியும் என்று கருத்த  தெரிவித்த நீதிபதிகள்,  உச்சநீதிமன்றம் நியமிக்கும் குழுவை யாரும் தடுக்க முடியாது நீதிமன்றம் பிறப்பிக்கவுள்ள இடைக்கால உத்தரவில் விவசாய நிலங்கள் பாதுகாக்க உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான  மூத்த  வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே கூறுகையில், சட்டங்களை அமல்படுத்துவதை மத்தியஅரச  அரசியல் வெற்றியாக பார்க்கக்கூடாது. இது சட்டங்கள் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்ட கவலைகளை தீவிரமாக ஆராய வேண்டும் என்று கூறினார்.

மேலும் விவாதங்களை தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதி,  நாங்கள் சிக்கலை தீர்க்க பார்க்கிறோம். நீங்கள் (விவசாயிகள்) காலவரையின்றி கிளர்ச்சி செய்ய விரும்பினால், நீங்கள் அவ்வாறு செய்யலாம் என்று  காட்டமாக தெரிவித்தார். அத்துடன், ராம்லீலா மைதானத்திலோ அல்லது வேறு இடங்களிலோ போராட்டங்களுக்கு டெல்லி போலீஸ் கமிஷனரிடமிருந்து விவசாயிகள் அனுமதி பெறலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து காரசாரமாக விவாதங்கள் நடைபெற்று வந்தன. அப்போது, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலை பார்த்து, விவசாயிகளின் போராட்டத்துக்கு தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்று பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதை ஏற்கிறீர்களா மறுக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த போராட்டத்தில்,  தடைசெய்யப்பட்ட அமைப்பினரின்  ஊடுருவல் இருந்தால்  நீங்கள் அதை உறுதிப்படுத்த வேண்டும். நாளைக்குள் உளவுத்துறை அறிக்கையுடன் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுங்கள் என அட்டர்னி ஜெனரலுக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

அதற்கு பதில் அளித்த கே.கே.வேணுகோபால், பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வோம் என்று தெரிவித்தார்.