சென்னை:

மிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் தண்ணீர் வழங்கி வருகிறோம் என்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்து உள்ளார்.

தமிழக மக்களை வாட்டி வதைக்கும் தண்ணீர் பிரச்சியை முடிவுக்கு கொண்டு வர,  மழைக்காக சிறப்பு யாகங்களை நடத்துமாறு அதிமுகவின் 53 மாவட்டச் செயலாளர்களுக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தி உள்ளனர்.  இந்தப் பூஜைகளில் அமைச்சர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு இந்து, கிறிஸ்தவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் அமைச்சர்கள், அதிமுக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற  எஸ்.பி.வேலுமணி தலைமையில் யாகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  தமிழகத்தில் மழை பொய்த்து விட்டது; இருந்தாலும்  பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழக மக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறோம் என தெரிவித்தார்.

மேலும், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் மழை வேண்டி வழிபாடு நடத்தப்பட்டு வரு கிறது. கோயில்களில் வருண யாகம் நடத்தப்பட்டு வருகிறது; வருண யாகம் நிச்சயமாக பலன் தரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னையில் கூடுதலாக தண்ணீர் பிரச்சினை உள்ளது, அதை அரசு சமாளிக்கிறது  என்றவர், தமிழகத்தில் 198 நாட்கள் மழை பொழியவில்லை என்றும், , தண்ணீர் பஞ்சம் இல்லை என்று நான் கூறவில்லை என்றும், இருந்தாலும், பல்வேறு திட்டங்கள் மூலம்  தண்ணீர் தட்டுபாடின்றி வழங்கி வருகிறோம்,  காவிரி, கிருஷ்ணா போன்ற அணைகளில் இருந்து நீர் கேட்டு வருகிறோம்  என்றும் கூறினார்.