கொழும்பு: நடிகர் ரஜினிகாந்த் இலங்கை செல்ல விசா மறுக்கப்பட்டதாக வெளியான செய்தி வதந்தி என்று நமல் ராஜபக்சே தெரிவித்து உள்ளார்.

ரஜினிகாந்த் இலங்கைக்கு செல்ல அவருக்கு அந்நாட்டு அரசு விசா தர மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.  இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே இது முற்றிலும் ஒரு வதந்தியாகும் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறி இருப்பதாவது:  இந்தியாவின் மூத்த நடிகர் ரஜினிகாந்த் இலங்கை செல்வதற்கு, அவருக்கு விசா அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என்ற செய்தியானது வதந்தி ஆகும்.

நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையுமில்லை, அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையுமில்லை.

இலங்கைவாசிகள் பலரை போன்று நானும், எனது தந்தையாரும் திரு. ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம், ஒரு தடையுமில்லை என்று தெரிவித்துள்ளார்.