கர்நாடக வாக்காளர்களுக்காக போரிடத் தயார் : ராகுல் காந்தி

டில்லி

ர்நாடக தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்காக போராட தயாராக உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் நேற்று வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகி உள்ளன.   வாக்காளர்களுக்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.    பாஜக அதிக இடங்களைப் பெற்றுள்ள போதிலும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பது கடினமாக உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் முடிவுகளுக்குப் பின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், “காங்கிரஸுக்கு வாக்களித்த அனைத்து வாக்களார்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.   உங்கள் ஆதரவை நாங்கள் என்றும் மறவோம்.   உங்களுக்காக போராட என்றும் தயாராக உள்ளோம்.” என தெரிவித்துல்ளார்.