கொல்கத்தா: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க, ஈடன் கார்டன் மைதானத்தை மேற்குவங்க அரசுப் பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.

கங்குலி கூறியதாவது, “நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு ஈடன் கார்டன் மைதானத்தை மேற்குவங்க மாநில அரசு கேட்டால், நாங்கள் நிச்சயம் அதனை ஒப்படைப்போம்.

இந்த நேரத்தில் எது தேவையோ அதனை செய்வதற்கு தயாராக உள்ளோம். இதில் எந்தவித பிரச்சினையும் இல்லை. இந்த நேரத்தில், மக்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும்.

மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் இருக்கும் விளையாட்டு ஸ்டேடியங்களை கொரோனா வைரஸ் தொற்றியோரை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றன என்று ஏற்கனவே பத்திரிகை.காம் செய்தியில் குறிபபிட்டிருந்தோம்.

அதனடிப்படையில், புகழ்பெற்ற ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தை ஒப்படைக்க தயாராக இருப்பதாக கஞ்குலி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.