சென்னை,

பிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தைக்கு நாங்க ரெடியாக இருக்கிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

சட்டசபையில்  பட்ஜெட் கூட்டம் நடைபெற்றபோது,  ஓபிஎஸ் சிறந்த ஆஸ்கர் நாயகன் என்று பேசியவர்  நிதி அமைச்சர் ஜெயக்குமார்.

இந்நிலையில் தற்போது ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் என்று கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ.மறைவை தொடர்ந்து சசிகலா அதிரடியாக கட்சியை கைப்பற்றியதாலும், முதல்வராக இருந்த ஓபிஎஸ்-ஐ வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய சொன்னதாலும், ஓபிஎஸ் தனி அணியாக களமிறங்கினார்.

அதைத்தொடர்ந்து சசிகலா ஆதரவு எடப்பாடி முதல்வராக பதவியேற்றார். கட்சியின் பிளவு காரணமாக அதிமுகவின் சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது.  பின்னர் நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அக்காள் மகன் டிடிவி போட்டியிட்டார். ஆனால், அவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது நிரூபணமானதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரட்டை இலையை தனது அணிக்கு ஒதுக்க கோரி தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது காரணமாக டிடிவி தினகரன் கைது செய்யப்படுவார் என்று பரவலாக செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் ஓபிஎஸ் நேற்று ஆட்சியும், கட்சியும் ஒரே குடும்பத்தில் இருப்பது சரியல்ல். சசிகலா குடும்பத்தினர் இல்லாத அதிமுக உருவாக வேண்டும்  இதற்கு தங்கள் அணி தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

ஓபிஎஸ்சின் இந்த கருத்தை தம்பித்துரை வரவேற்று இருந்தார். அதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு மூத்த தமிழக அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து அதிமுக எம்.எல்ஏக்கள் அனைவரும் சென்னை வரவழைக்கப்பட்டனர்.

தற்போது,  ஐஎன்எஸ் போர்க்கப்பலில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்தக்கப்பலில் அதிகார போட்டியால் பிரிந்த அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிமுகவின் மூத்த அமைச்சரான ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ரெடியாக உள்ளோம்  எப்போது வேண்டுமானாலும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அமைச்ச்ர ஜெயகுமார் கூறியுள்ளார்.

ஆனால் தற்போது கப்பலில் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று கூறிய அவர், பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

சட்டசபை நிதிநிலைக் கூட்டத்தொடரின் போது ஓபிஎஸ் ஆஸ்கர் நாயகன் என்றும் சிறந்த நடிகர் என்றும் கூறியவர் ஜெயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.