பாலஸ்தீன அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார்; டிரம்பின் ஆலோசகர் பேட்டி

அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த ஆலோசகர் மற்றும் மருமகனான குஷ்னெர் பாலஸ்தீன அதிபருடன் இணைந்து பணியாற்ற  அமெரிக்கா தயார் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்காவின் கணவர் ஜாரெட் குஷ்னெர்.  இவர் டிரம்பின் மூத்த ஆலோசகராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த நிலையில், பாலஸ்தீனிய நாட்டில் இருந்து வெளிவரும் அல் குட்ஸ் என்ற செய்தி நிறுவனத்திற்கு குஷ்னெர் பேட்டி அளித்து உள்ளார்.

அப்போது அவர், “பாலஸ்தீன , அதிபர் அப்பாஸ் விரும்பினால் அவருடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயார்” என தெரிவித்துள்ளார்.

 

 

அவர் பாலஸ்தீனிய மக்களுக்கு விடுத்துள்ள நேரடியான செய்தியில், பிரகாசம் நிறைந்த எதிர்காலம் அமைவதற்கு நீங்கள் தகுதியானவர்கள்.  இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் ஆகிய இரு நாட்டு மக்களும் தங்களது தலைமையை வலிமைப்படுத்தும் நேரமிது.

ஒரு தீர்வை நோக்கிய விசயத்தில் கவனம் செலுத்துவதற்கு ஊக்கமளிக்க வேண்டிய நேரமிது.  இந்த முயற்சிக்கு அச்சப்பட வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்