காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி ஒதுக்கீடு முழு திருப்தி அளிக்கிறது : வேணுகோபால்

சென்னை

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் அளித்ததில் முழு திருப்தி அடைந்துள்ளதாக காங்கிரஸ் பொது செயலர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

 

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தமிழ்நாடு மக்களவை தொகுதிகளும் பாண்டிச்சேரி மக்களவை தொகுதியும் அடங்கும். இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்தர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் வேணுகோபால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின் போது வேணுகோபால், ”மக்களவை தேர்தல் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் அளித்ததில் நாங்கள் முழு திருப்தி அடைந்துள்ளோம்.

பிரதமர் மோடியின் தலைமையில் அமைந்துல்ள மத்திய அரசின் மீது நாட்டு மக்கள் அனைவரும் கடும் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளில் வெற்றி பெறும்.” என தெரிவித்துள்ளார்.

You may have missed