பெங்களூரு:

ரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

மும்முனை போட்டி நிலவி வரும் கர்நாடகாவில், பாஜக 150 இடங்களை பிடிக்கும் என்று எடியூரப்பாவும், மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்கும் என்று தேவகவுடாவும் கூறி வரும் நிலையில், காங்கிரஸ் முழு அதிகாரத்துடன் ஆட்சிக்கு வரும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

இன்று தனது சொந்த ஊரில் வாக்கினை செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 120-க்கு மேலான இடங்கள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும்,  காங்கிரஸ் கட்சி முழு அதிகாரத்துடன் ஆட்சிக்கு வரும் என்று நாங்கள் மிகவும் உறுதியாக நம்புவதாகவும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள சித்தராமையாவின் மகன், யாதேந்திரா கூறும்போது,  கடந்த ஒன்றை ஆண்டுகளாக நான் கிராமம் கிராமமாக சென்று  மக்கள் சந்தித்து வருக்கிறேன். நான் எங்கு சென்றாலும் மக்களின் ஆதரவு காங்கிரசுக்கு இருப்பதை அறிந்ததாகவும், காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இவர் கர்நாடகாவில், வருணா தொகுதியில் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் கர்நாடக தேர்தல் குறித்து கூறும்போது,  கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற கோயில்களில் பிரார்த்தனை செய்வதற்காக நேபாளம் சென்றுள்ளாரா மோடி? என கேள்வி எழுப்பி உள்ளார்.