டந்த 28ம் தேதி முதல் காணாமல் போய்விட்டதாக சொல்லப்படும் “வேந்தர் மூவீஸ்: அதிபர் மதனை கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கதறினர்.
“வேந்தர் மூவிஸ்” நிறுவன அதிபர்  மதனை கடந்த 28ந் தேதியிலிருந்து காணவில்லை.  “காசிக்குச் சென்று கங்கையில் மூழ்கி சமாதி அடையப்போகிறேன். எனது பிரச்சினைகளை ஐ.ஜே.கே. கட்சி தலைவரும் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் அதிபருமான பாரிவேந்தர்தான் தீர்க்க வேண்டும்” என்று கடிதம் எழுதிவிட்டுச் சென்ற மதனை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஐ.ஜே.கே. கட்சி தலைவர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்துவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் மதன். ஆகவே “வேந்தர் மூவிஸ்” என்று அவரது பெயரிலேயே திரைப்பட நிறுவனத்தை துவங்கினார். வேந்தர் மூவிஸ் நிறுவனம் சார்பாகன திரைவிழாக்கள் பலவற்றில் பச்சமுத்துவும் கலந்துகொண்டார்.
IMG-20160603-WA0007 (1)
பச்சமுத்துவின் ஐ.ஜே.கே. கட்சி வேட்பாளராக தேர்தலிலும் போட்டியிட்டார் மதன்.
இந்த நிலையில் சமீபகாலமாக பச்சமுத்துவுக்கும், மதனுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் மதன் காணாமல் போனார்.
இதற்கிடையே இன்று மதன் குடும்பத்தினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
மதனின்  தந்தை பாலகிருஷ்ணன் தாய் R.S.தங்கம் மனைவி சுமலதா மதன் மற்றும் மகன் ஆகியோர் இந்த  பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்கள்.
அப்போது அவர்கள், “மதன் காணாமல் போனது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.  எஸ்.ஆர்.எம். கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாக கூறி மாணவர்களிடம் பண மோசடி செய்ததால்தான் மதன்  தலைமறைவாக உள்ளதாக பாரிவேந்தர் என்ற பச்சமுத்து  கூறியிருப்பது முற்றிலும் தவறு.  பச்சமுத்து அவர்களை  மதன்,  தெய்வமாக வழிப்பட்டவர்.
ஒரு காலமும் பச்சமுத்து  குடும்பத்துக்கு மதன்  துரோகம் செய்யமாட்டார். பச்சமுத்துவை சந்திக்க முயன்றும் எங்களால் முடியவில்லை” என்று மதன் குடும்பத்தினர் கதறலுடன் தெரிவித்தனர்.
மேலும், “மதன் காணாமல் போனது குறித்து,  முதலமைச்சர் மற்றும் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்து உள்ளோம்.அவர்களும் கண்டுபிடித்து தருவதாக கூறியுள்ளார்கள்” என்று மதன் குடும்பத்தினர்  கூறினார்கள்.