சிட்னி: முடிவைப் பற்றி கவலையின்றி, கடைசிவரை போராடுவது என்பதே, மூன்றாவது டெஸ்ட்டில் எங்களின் நோக்கமாக இருந்தது என்றுள்ளார் இந்தியாவின் தற்காலிக கேப்டன் அஜின்கியா ரஹானே.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு சவாலான டெஸ்ட்டில், பல இன்னல்களை மீறி, இந்திய அணி டிரா செய்து அசத்தியது.

இதனையடுத்து பேசிய கேப்டன் ரஹானே, “இன்றைய நாள் காலையில், கடைசிவரை போர்க் குணத்துடன் செயல்படுவது என்பதாகவே இருந்தது. முடிவைப் பற்றி யோசிக்கவில்லை. இன்றைய எங்களின் ஆட்டத்தை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், இந்தப் போட்டி முழுவதும் நினைவில் கொள்ளத்தக்கது.

முதல் இன்னிங்ஸில் 200 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த ஆஸ்திரேலியாவை, 338 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்ததும் சிறப்பானது. அதேசமயம், நாங்கள் மேம்படுத்திக்கொள்ள வ‍ேண்டிய விஷயங்களும் உள்ளன.

மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் அனுமன் விஹாரி, ரிஷப் பன்ட் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆடிய ஆட்டம் பாராட்டத்தக்கது” என்றுள்ளார் ரஹானே.