Random image

ராணுவ வீரர் படுகொலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்….மகன் உருக்கம்

டில்லி:

காஷ்மீர் மாநில சர்வதேச எல்லையில் ராம்கார்க் செக்டாரில் எல்லைப் பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் நரேந்திர குமாரை பாகிஸ்தான் ராணுவம் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து நரேந்திர குமார் மகன் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ இது எங்களுக்கு பெருமைபடக்கூடிய விஷயம். யாரும் இது போன்ற சம்பவங்களில் மாட்டிக்கொள்வதில்லை. நம்மால் பெருமை படாமல் இருக்க முடியாது. இன்று நாம் பெருமைப்படுவோம். நாளை யாராவது கொல்லப்படுவார்கள்?. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பெருமை 2 அல்லத 3 நாட்களுக்கு நீடிக்கும். ஆனால் அதன் பின்னர் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எங்களுக்கு எவ்வித உதவியும் செய்ய முன்வரமாட்டார்கள். நானும் எனது அண்ணனும் வேலை இல்லாதவர்களாக இருக்கிறோம். என் தந்தை நாட்டுக்காக உயிரை தியாகம் செய்துள்ளார். அரசு எங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்’’ என்றார்.