மும்பை:

டைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் தனது சகோதரர்கள் 2 பேர் வெற்றிபெற்றது குறித்து நடிகர் ரித்தேஷ் தேக்முக், நெகிழ்ச்சியுடன் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், நாங்கள் சாதித்து காட்டியுள்ளோம் பப்பா என்று தனது மறைந்த தந்தையும், முன்னாள் முதல்வருமான விலாஷ்ராவ் தேஷ்முக்கை நினைவு கூர்ந்து உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இரண்டு பணியாற்றியவர் விலாஸ்ராவ் தேஷ்முக். இவரது இரண்டாவது மகன் ரித்தேஷ் தேஷ்முக். இவர் பாலிவுட் நடிகராக அறிமுகமான நிலையில், தற்போது படத்தயாரிப்பாளராகவும் உள்ளார்.

கடந்த 21ந்தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், அவரும், அரவது சகோதரர்கள் அமித் மற்றும் தீரஜ் இருவரும் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு பெற்றுள்ளனர்.

ரித்தேஷின் அண்ணன் அமித் தான்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சைலேஷ் லகோட்டியை விட 38,217 அதிக வாக்குகள் பெற்றுள்ளார். தற்போது 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். தம்பி தீரஜ், இந்த தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட நிலையில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக கூட்டணி வேட்பாளரை விட 1.3 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று  வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றி குறித்து டிவிட் பதிவிட்டுள்ள ரித்தேஷ் தேஷ்முக்,  `நாங்கள் சாதித்து காட்டியுள்ளோம்  அப்பா’ என்று தந்தையின் புகைப்படத்துடன் உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.

அவரின் உருக்கமான பதிவு வைரலாகி வருகிறது.

இந்த பதிவுக்கு பின்னணி என்ன என்பத குறித்து தகவல்கள் பரவி வருகின்றன. 2008-ம் ஆண்டு விலாஸ்ராவ் தேஷ்முக் முதல்வராக இருந்தபோதுதான், மும்பை தாஜ் ஹோட்டல் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், பிரபல தெலுங்கு இயக்குநர் ராம்கோபால் வர்மா மும்பை தாக்குதலை மையமாக வைத்து சினிமா எடுத்தார். அது தொடர்பாக அவர் தாக்குதலுக்கு உள்ளான ஓட்டலை பார்க்க, விலாஸ்ராவ் உதவி செய்ததாக  கூறப்படுகிறது. இதற்கு பிரதிபலனாக அந்த படத்தில் அவரது மகன் ரித்தேஷ் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியது.

இந்த  தேர்தலின்போது, மகாராஷ்டிரா தேர்தல் களத்தில்  இந்தக் குற்றச்சாட்டை தெரிவித்த பா.ஜ.க,  அமித் மற்றும் தீரஜூக்கு எதிராக பிரசாரமாக  செய்து வந்தது. ஆனால், அதற்கு ரித்தேஷ் மறுப்பு தெரிவித்து வந்தார். தனது தந்தை உயிரோடு இருக்கும்போது இதை கூறியிருந்தால் அவர் பதில் தெரிவித்திருப்பார், தற்போது குற்றம் சாட்டுவது சரியல்ல என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், பாஜகவின் எதிர்ப்பையும் மீறி, ரித்தேஷ் சகோதரர்கள் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் அமோகமாக வெற்றி பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்தே ரித்தேஷ் இந்த உருக்கமனா பதிவை பதிவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.