வாஷிங்டன்

ட கொரியாவுக்கு அமெரிக்க கைதிகளை விடுவிக்க பணம் கொடுக்கவில்லை என் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி உள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த கிம் சாங் டம், கிம் ஹாக் சாங், கிம் டாங் கல் ஆகிய மூவரும் வடகொரியாவில் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் வரும் 12ஆம் தேதி சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.   இதனால் நல்லெண்ண அடிப்படையில் வட கொரியா மூன்று அமெரிக்கர்களையும் விடுதலை செய்தது.

வாஷிங்டன் புறநகர் பகுதி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அம்மூவரையும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மனைவியுடன் சென்று வரவேற்றார்.   அபோது அவர், “வட கொரிய அதிபர் இச்செயல் மூலம் அமெரிக்காவுக்கு நல்லதொரு சேவை செய்துள்ளார்.   வடகொரியாவில் சிறை வைக்கப்பட்டு இருந்தவர்களை மிகவும் கண்ணியத்தோடு விடுவித்துள்ளார்.

முந்தைய ஒபாமா அரசு ஈரான் பிடித்து வைத்திருந்த அமெரிக்க கைதிகளை மீட்க 1.8 பில்லியன் டாலர் கொடுத்து மீட்டு வந்தது.   ஆனால் தற்போது இவர்களை மீட்க நாங்கள் பணம் எதுவும் கொடுக்கவில்லை.   இவர்கள் முழுக்க முழுக்க நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்”  என தெரிவித்துள்ளார்.