வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் போதுமான அளவு உள்ளதா? : தேர்தல் ஆணையம் பதில்

டில்லி

ரும் 2019 மக்களவரி தேர்தலுக்கக 23.25 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்கும் பணி நடந்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்களை மின்னணு வாக்கு இயந்திரங்கள் மூலம் நடத்தி வருகிறது.  அத்துடன் சமீபத்திய தேர்தல்களில் வாக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்களும் உபயோகப்படுத்தப் படுகின்றன.   தற்போதுள்ள நிலையில் போதுமான அளவு வாக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் இல்லை என கூறப்படுகிறது.  இது குறித்து தகவலறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட வினாக்களுக்கு தேர்தல் ஆணையம் விடை அளித்துள்ளது.

தேர்தல் ஆணையம், “சுமார் 14 மாதங்களுக்கு முன்பு 23.25 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 16.15 லட்சம் வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரங்களுக்கும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.   ஆனால் ஒப்பந்தம் செய்த இரு நிறுவனமும்  இதுவரை 3.48 லட்சம் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை அளித்துள்ளது.  இது ஒப்பந்த அளவில் 22% மட்டுமே ஆகும்.

இன்னும் 3 மாத அவகாசத்தில் இந்த இயந்திரங்களை இரு நிறுவனங்களும் அளிக்க வேண்டும்.    அதில் சற்றே தாமதம் ஏற்படலாம்.  எனினும் வரும் நவம்பர் மாத இறுதிக்குள் தேவையான அளவு இயந்திரங்களை அந்த நிறுவனங்கள் அளித்து விடும்.   அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக கிடைத்து விடும்” என தெரிவித்துள்ளது.

 

கார்ட்டூன் கேலரி