இலவச புள்ளிகளின் மேல் விருப்பமில்லை: இலங்கை கேப்டன்

லண்டன்: தங்களின் அணிக்கு இலவசப் புள்ளிகளை விரும்பவில்லை என்று கூறியுள்ளார் இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே.

பிரிட்டனில் அவ்வப்போது மழை பெய்துவருவதால், சில போட்டிகள் ரத்தாகும் சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. இலங்கை அணியைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுடன் ஆட வேண்டிய ஆட்டங்கள் மழையால் தடைபட்டு, தொடர்புடைய அணிகளுக்கு தலா 1 புள்ளிகள் பிரித்து வழங்கப்பட்டன.

இலங்கை அணிக்கு இந்தவகையில் மட்டும் 2 புள்ளிகள் கிடைத்துள்ளன.

ஆனால், இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே கூறியுள்ளதாவது, “நாங்கள் உலகக்கோப்பை போட்டியில் சவாலான கிரிக்கெட்டை ஆடவே வந்துள்ளோம். எங்கள் திறமையின் மூலமாக கிடைக்கும் புள்ளிகள்தான் நாங்கள் விரும்புவது.

மழையால் கிடைக்கும் இலவசப் புள்ளிகளை நாங்கள் விரும்பவில்லை. அது எங்கள் லட்சியமும் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.