தோனி 2022 வரை ஐபிஎல் விளையாட வேண்டும் – சென்னை அணி விருப்பம்!

சென்னை: வரும் 2022ம் ஆண்டுவரை, மகேந்திர சிங் தோனி, சென்னை அணிக்காக விளையாட வேண்டுமென எதிர்பார்ப்பதாக சென்னை அணி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தற்போது 39 வயதாகும் தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து, தொடர்ச்சியாக பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டுவரும் நிலையில், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

“தோனி மிகச்சிறந்த உடற்தகுதியைக் கொண்டுள்ளார். எனவே, அவருக்கான உடல்தகுதி இருக்கும்வரை அவர் விளையாடலாம். அவர், வரும் 2022ம் ஆண்டுவரை ஐபிஎல் தொடரில் பங்கேற்க வேண்டுமென்பது எங்களின் எதிர்பார்ப்பு.

சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை, எங்களின் பிரதான வீரரே அவர்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் எங்களின் நீண்டகால கேப்டன்” என்றுள்ளார் சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன்.