தமிழகத்திற்கு முதல் கட்டமாக 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வந்து சேரும்: தலைமைச் செயலாளர் தகவல்

சென்னை:

மிழகத்திற்கு முதல் கட்டமாக 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வந்து சேரும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நிலவரங்கள் குறித்து அறிவிக்க தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம்,தமிழகத்தில் இன்று மேலும் 58 பேருக்கு கொரோனா உறுதி; மொத்த எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 47, 056 பேர் கண்கானிப்பில் உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 9,525 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட 485 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. ஊரடங்கை பொருத்தவரை நாடு தழுவிய அளவில் பிரதமர் அறிவிக்கும் முடிவை ஏற்று செயல்படுத்துவோம்.

தமிழகத்திற்கு ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் இன்னும் வந்து சேரவில்லை. தமிழகத்திற்கு வரவேண்டிய ரேபிட் டெஸ் கிட் கருவிகள் அமெரிக்காவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளில் முதல் கட்டமாக 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் தமிழகத்திற்கு வந்து சேரும். கொரோனா சோதனைக்கான பிசிஆர் கருவிகள் தேவையான அளவு உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் கொரோனா ஆய்வகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.