சபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு

திருவனந்தபுரம்:

பரிமலை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வன்முறை களமாக மாறி வரும் நிலையில், சுமூக நிலை ஏற்படுத்து வது குறித்து இன்று கேரள தலைநகர்  திருவனந்தபுரத்தில் தேவசம் போர்டு கூடி ஆலோசனை நடத்தியது.

அதைத்தொடர்ந்து, தேவசம் போர்டு சார்பில் உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்து உள்ளார்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாநிலம் முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளப்பி உள்ள நிலையில், தற்போது ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சில பெண்கள் கோவிலுக்கு செல்ல முயன்றதால் அவர்கள், பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட னர். இன்று ஐதராபாத்தை சேர்ந்த செய்தியாளர் கவிதா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ரெஹைனா ஆகியோர் காவல்துறை பாதுகாப்புடன் சன்னிதானத்திற்குள் நுழைய முயற்சி செய்தனர். இதன் காரணமாக பக்தர்கள் வெகுண்டு எழுந்து கோஷமிட்டு, அவர்களை திருப்பி அனுப்பினர்.

இதன் காரணமாக சபரிமலையில்  பரபரப்பும், பதற்றமும் நிலவியது. ஏற்கனவே மக்கள் போராட்டம் காரணமாக  பல இடங்களில் மோதல், தடியடி ஏற்பட்டு கலவரம் ஏற்பட்டது. ஏராளமான அரசு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க கூடாது என கேரளா முழுவதும் சபரிமலை பாதுகாப்பு இயக்கம், பா.ஜ.க., உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பரபரப்பான சூழ்நிலையில்,  பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காண்பதற்காக இன்று தேவசம் போர்டு கூடியது.

இன்றைய கூட்டத்தில் சபரிமலை விவகாரம் குறித்து விவாதித்ததாகவும், அதைத்தொடர்ந்து தேவசம் போர்டு சார்பில் உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே சபரிமலை தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் அய்யப்ப பக்தர்கள் சங்கம், பிராமணர்கள் சங்கம், பந்தள அரச குடும்பத்தினர்கள் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தற்போது தேவசம் போர்டு சார்பிலும் மனு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

You may have missed