முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானதைத் தொடர்ந்து, அவரது மறைவுக்கு, மணிப்பூர் காலநிலை செயற்பாட்டாளரான சிறுமி லிசிபிரியா கங்குஜாம்  இரங்கல் தெரிவித்து உள்ளார். நாட்டின் ஒரு சிறந்த புத்திஜீவியை இழந்துவிட்டோம் என்று தெரிவித்து உள்ளார்.

கொரோனா மற்றும் மூளை அறுவை சிகிச்சை செய்துகொண்ட முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முயர்ஜி கடந்த ஒரு வாரமாக கோமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பிரதமர் உள்பட அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,   மணிப்பூர் காலநிலை மாற்ற செயற்பாட்டாளர் 8 வயது சிறுமி லிசிபிரியா கங்குஜாம்  பிரணாப் முகர்ஜி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பாரதரத்னா பிரணாப் முகர்ஜி காலமானதைக் கேட்டு வருத்தமாக இருக்கிறது.

நாட்டின் ஒரு சிறந்த புத்திஜீவியை இழந்துவிட்டோம்.

அவரது குடும்பத்தினருக்கு  எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐயா நீங்கள் என்றென்றும் நினைவில் இருப்பீர்கள் ஐயா, ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.

மேலும், மற்றொரு டிவிட்டில்,

நெறிமுறைகளின்படி இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, தேசிக்கொடி அரைக்கம்பபத்தில் பறக்கும், மீண்டும் 7 நாட்கள் “தேசிய துக்கம்” இருக்கும் என்று நினைக்கிறேன்.

வழக்கமாக அலுவலகம் திறந்திருக்கும், ஆனால் எங்கள் தலைவர்கள் இப்போதைக்கு தங்கள் கவனத்தை திசை திருப்புவார்கள்.

இவ்வாறு கூறியுள்ளார்.