டெல்லி: கொரானா பாதிப்புக்கான இறப்பு எண்ணிக்கையானது, பிளாஸ்மா தெரபி சிகிச்சையால் குறைந்துள்ளது என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அவர் மேலும் கூறியதாவது: டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிக உளவில் உள்ளது. நிலைமை கட்டுக்குள் உள்ளதால் கவலைப்பட தேவையில்லை.

மருத்துவ பரிசோதனைகளை 3 மடங்கு உயர்த்தி உள்ளோம்.  ஆனால், பாதிப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு 3 ஆயிரம் வரை மட்டுமே உயர்ந்து உள்ளது.  மொத்த நோயாளிகளில், உத்தேசமாக 45 ஆயிரம் பேர் வரை குணமடைந்து இருக்கின்றனர்.

பிளாஸ்மா தெரபியால் தீவிர ஆபத்தில் உள்ள நோயாளிகளை காப்பாற்றுவது என்பது கடினம். ஆனால், குறைவான தொற்றில்  பாதிக்கப்பட்ட நோயாளிகளை, நிலைமை மேலும் மோசமாகாமல் தடுக்க இந்த சிகிச்சை உதவும்.

எல்என்ஜேபி மற்றும் ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகளில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிப்பதற்கு அனுமதி பெற்றுள்ளோம்.  இதன்படி, எல்என்ஜேபி மருத்துவமனையில் பிளாஸ்மா தெரபி சிகிச்சையை தரத்தொடங்கிய பின்னர் பலி எண்ணிக்கை முன்பை விட குறைந்து உள்ளது என்று தெரிவித்துள்ளார்.