நாங்கள் மிசா, தடா, பொடாவெல்லாம் பார்த்தாச்சு..! ஸ்டாலின்

சென்னை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்திருந்த வழக்கின் விசா ரணைக்கு  சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்டாலின் ஆஜரானார். அதைத்தொடர்ந்து அவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம்  பேசிய ஸ்டாலின், நாங்கள் மிசா, தடா, பொடாவெல்லாம் பார்த்தாச்சு… என்றார்.

அரசியல்வாதிகள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில்  சிறப்பு நீதிமன்றம் சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில்  அமைக்கப்பட்டு உள்ளது. இந்தநீதிமன்றத்தில் முதல் வழக்காக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி ஸ்டாலின் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அதை நிராகரித்த உயர்நீதி மன்றம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.

இந்த நிலையில், இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக  ஸ்டாலின் ஆஜரானார். அவருக்கு விசாரணைக்கு ஆஜராக நீதிமன்ற விலக்கு அளித்தது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஒரு முதல்வர் மீது சிபிஐ விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றமே சொல்லிவிட்டது. குட்கா புகழ் விஜயபாஸ்கரையும் டிஜிபி டி.கே. ராஜேந்திரன் மீதும் வழக்கு இருக்கிறது.

இப்படி வழக்குகளால் மானமே போய் விட்ட அதிமுக அரசு, என் மீது ஏழு மானநஷ்ட வழக்குகள் போட்டிருக்கின்றன. நாங்கள் ஏற்கனவே  மிசா, தடா, பொடாவையெல்லாம் பார்த்தாச்சு.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.