இஸ்லாமாபாத்:

ந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், 2 இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டதாகவும் ஒரு விமானியை கைது செய்து இருப்பதாகவும், பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் ஏ.காஃபூர் தெரிவித்து உள்ளார்.

நேற்று அதிகாலை இந்தியா -பாகிஸ்தான்குள் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்களை துவம்சம் செய்து வந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லையை தாண்டி வர முயற்சிப்பதும், அதை இந்திய விமானப்படைகள் விரட்டியடிப்பதும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை இந்தியா உள்ளே புகுந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வந்தன. ஆனால், அவ்வாறு ஏதும் நடைபெறவில்லை என்று இந்தியா தரப்பில் மறுக்கப்பட்ட நிலையில், தற்போது பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் ஏ.காஃபூர் 2 இந்திய விமானங் களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது என்று தெரிவித்து உள்ளார். பாகிஸ்தான் தாக்குதலுக்கு ஆளான  ஒரு விமானம்  இந்திய எல்லையில் விழுந்தது. இன்னொரு விமானம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் விழுந்தது. அதில் இருந்த 2 விமானிகளும் பிடிப்பட்டனர் என்றவர், அவர்களில்  ஒரு விமானி காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்றும், கைது செய்யப்பட்டவர்  கமாண்டர் அபிநந்தன் என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும், பாகிஸ்தான் போரை விரும்பவில்லை என்று கூறிய மேஜர், நாங்கள் அமைதியை விரும்புகிறோம் என்றும் தெரிவித்து உள்ளார்.