நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவை கோரினோம்: ஒய்எஸ்ஆர் கட்சி எம்.பி.

டில்லி:

மோடி தலைமையிலான மத்திய அரசை எதிர்த்து, ஆந்திராவை சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

அதற்கான கோரிக்கையை பாராளுமன்ற சபாநாயகரிடம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய அதிமுக எம்.பிக்கள் பின்னர் பாராளுமன்ற அவை நடவடிகைககளில் கலந்துகொண்டு அமளியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக பாராளுமன்ற அவைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பித்துரை, மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து தங்களை யாரும் தொடர்பு கொள்ள வில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.வரபிரசாத் ராவ் கூறியதாவது,

மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு கோரி அனைத்துகட்சியினரையும் பேசி வருகிறோம். அதுபோல, அதிமுகவின் ஆதரவையும் நாடினோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே சரி என்று கூறிய அவர், காவிரி பிரச்சினையில் தனது கட்சி தமிழகத்துக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும்,  தான் ஆதரவு 25 ஆண்டுகளாக தான் தமிழகத்தில் பணியாற்றி உள்ளதாகவும் தெரிவித்தார்.