மக்களின் முடிவுகளை அறிய 3 நாட்கள்தானே உள்ளது ‘வெயிட் அன்ட் சி’: ஸ்டாலின்

சென்னை:

க்களின் தீர்ப்பு தெரிய இன்னும் 3 நாட்கள்தானே இருக்கிறது… பொறுத்திருந்து பார்ப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் நேற்று மாலையுடன் தேர்தல் முடிவடைந்த நிலையில், நேற்று இரவு முதலே தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்புகள் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.  பெரும் பாலான கருத்துக்கணிப்புகள் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்றும், தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணியே அமோக வெற்றிபெறும் என்றும் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், எங்களிடம் எப்போதும் கலைஞரின் நிலைப்பாடு உள்ளது என்றவர், தற்போது வெளியாகி வரும் கருத்துக்கணிப்புகள் எங்களுக்கு எதிரானதா ஆதரவானதா என்பது குறித்து நாங்கள் ஏதும் கவைலைப்படவில்லை, மக்களின் தீர்ப்பு 23ந்தேதி தெரிந்து விடும்.  அதுவரை பொறுத்திருந்துப் பார்ப்போம், வெயிட் அன்ட் சி என்று கூறி உள்ளார்.