ஆசாத் காஷ்மீர் என்பது பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியாகும். அங்கு வாழும் மக்கள் தாங்கள் பாகிஸ்தானால் அடிமைகள் போல நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

pok

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் காஷ்மீரின் ரவாலாகோட் பகுதியில் இருந்து கடந்த திங்களன்று வந்த பேருந்தில் ஐந்து பெண்கள் உட்பட 39 பேர் பயணம் செய்து ஜம்மு வந்தடைந்தனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று அவர்களிடம் கேட்கப்பட்டபோது. இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் வாழும் மக்கள் மகிழ்ச்சியோடும், செல்வச் செழிப்புடனும் வாழும்போது பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் தாங்கள் அடிமைகள் போல நடத்தப்படுவதாக அப்பகுதியில் வாழும் ஹாஜி ஃபாசல் ஹுசேன் என்பவர் தெரிவித்தார்.
எங்கள் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் அங்கு பாதுகாப்பில்லை, எங்கள் வாழ்க்கைக்கு அங்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்று அவர் தெரிவித்தார். ஆசாத் காஷ்மீரிலிருந்து வந்தவர்கள் இந்தியாவில் இருக்கும் தங்கள் உறவினர்களை சந்திப்பதற்காக வந்திருந்தனர்.