புது டெல்லி:

பிபிஇக்களின் உற்பத்தி திறனில் இந்தியா ஐந்து வாரங்கள் இழந்தது. எங்களுக்குத் தேவையான விபரங்கள் மற்றும் அடிப்படை எண்களை வழங்கியிருந்தால், நாங்கள் இலக்குகளை நிர்ணயித்து அதற்கேற்ப நிர்வகித்திருப்போம்” என்று இந்திய நோய் தடுப்பு உடைகள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

சுகாதாரப் பணியாளர்கள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அல்லது பிபிஇ கருவிகளைப் பெறுவது குறித்து பலமுறை கவலைகளை எழுப்பிக் கொண்டிருக்கும் ஒரு நேரத்தில், சுகாதார நெருக்கடியின் இந்த அம்சத்தை மோடி அரசு போதுமான அளவு கையாண்டிருக்கிறதா என்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.

கடந்த ஒரு வாரமாக, பிபிஇ கிட்களின் பற்றாக்குறையால் மருத்துவர்கள் ரெயின்கோட், ஹெல்மெட் மற்றும் பிற மாற்று வழிகளை அணிவதாக பல்வேறு தகவல்கள் வந்துள்ளன.

இந்த பற்றாக்குறையை சமாளிக்க பிபிஇ உற்பத்தியாளர்கள் தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும், ஊரடங்கு மற்றும் பிற சூழ்நிலைகளால் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் புரிந்து கொள்ள, இந்திய நோய் தடுப்பு உடைகள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (பி.டபிள்யூ.எம்.ஏ.ஐ) தலைவர் சஞ்சீய் இங்கே பகிர்ந்து கொண்டுள்ளார். அதை இங்கே விரிவாக பார்க்கலாம்.

பிபிஇக்களின் பற்றாக்குறையை சரி செய்வதில் ஏற்படும் சிக்கலை எதிர்கொள்ளும் குறித்து மத்திய அரசு மிகவும் தாமதமாகவே பதிலளித்தது.

சஞ்சீவ் உள்ளிட்ட பிபிஇ உற்பத்தியாளர்கள் பிப்ரவரி மாதம் சுகாதார அமைச்சகத்தை தொடர்பு கொண்டதாகவும், பிபிஇ கிட்களை சேமித்து வைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இருந்த போதும் அதை அரசு பெரியதாக எடுத்து கொள்ளவில்லை என்பதுடன், எங்களது கேள்விகளுக்கு அரசு சரியான பதிலை அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய நோய் தடுப்பு உடைகள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சஞ்சீவ் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அதில்,

கேள்வி: அரசு பதிலளிக்க தாமதமானதால் தான் நோய் தடுப்பு பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது என்று கருதுகிறீர்களா?

சஞ்சீவ்: ஆம். எங்கள் கேள்விகளுக்கு அரசு பிப்ரவரி 15-ஆம் தேதியே பதில் அளித்திருக்கலாம். அப்படி பதில் அளித்திருந்தால், இந்த சிக்கலை சந்தித்து இருக்க மாட்டோம் என்றார்.

நோய் தடுப்பு உடைகள் தயாரிக்கும் துறை ஒழுங்குபடுத்தப்பட்ட துறை அல்ல என்பதால், இதுபோன்ற பிரச்சினைகளின் போது, பின்பற்ற வேண்டியவை குறித்து உற்பத்தியாளர்களுக்கு எந்தவிதமான வழிகாட்டுதல்களும் இல்லை. எனவே, அவர்கள் என்ன சொல்கிறார்கள், நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அரசாங்கத்தையே எதிர்நோக்கி இருக்க வேண்டிய கட்டடாயம் ஏற்பட்டுள்ளது.

உற்பத்தியாளர்கள் அனைவரும் முதலில் வணிகர்கள். எனவே அவர்கள் ஒருவித வழிகாட்டுதல் இருக்க வேண்டுமென்று எதிர் நோக்கியுள்ளனர். அவர்கள் அந்த வழிகாட்டுதல்களுடன் பொருந்தக்கூடிய தயாரிப்புகளை தயாரிப்பார்கள். இதையடுத்த பின்னர் தான், அவர்களால், தங்கள் தயாரிப்பாளர் பொருட்களை இருப்பு வைக்க முடியும். இந்நிலையில், இதுபோன்ற பொருட்களை தயாரிக்கப்பதற்கான வழிகாட்டுதல்கள் மார்ச் 24 -ஆம் தேதி வெளியிடப்பட்டன.

கேள்வி: நோய் தடுப்பு உடைகளுக்கு எப்போது டிமாண்ட் ஏற்பட்டது?

சஞ்சீவ்: மார்ச் 5 முதல் 8 வரை, மாநில அரசுகள், ராணுவ மருத்துவமனைகள், ரயில்வே மருத்துவமனைகள் ஆகியவற்றின் டெண்டர்கள் உள்ளே வரத் தொடங்கின. இருந்தாலும், மத்திர அரசின் தாமதமான பதில் காரணமாக, இதற்கான தயாரிப்புகள் தாமதமாகின. ஆனாலும் நோய் தடுப்பு உடை தயாரிப்பாளர்கள் விடுத்த பல்வேறு கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சகம் பதிலளிக்கவில்லை.

ஊரடங்கு உத்தரவால் நோய் தடுப்பு உற்பத்தியாளர்கள் சந்தித்த துயரங்கள் இங்கே பட்டியலிடப்பட்டன.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, நோய் தடுப்பு பொருட்கள் என்பது, கையுறைகள், மருத்துவ முகமூடிகள், கண்ணாடி அல்லது முகக் கவசம், மற்றும் கவுன் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். மேலும் இதில், N95 முகமூடிகள் மற்றும் கவசங்கள் போன்ற சுவாசக் கருவிகளும் இடம் பெற்றிருக்கும்.

சஞ்சீவ்: நாங்கள் உடலை சுற்றி இருக்கும் ஆடை அல்லது ஒட்டுமொத்த விஷயங்களைப் பற்றி தான் குறிப்பிட்டு பேசினோம், இது ஒரு பருவகால தயாரிப்பு அல்ல. இதுபோன்ற தட்டுபாடு உள்ள நிலைகளில், நெருக்கடியை சமாளிக்க உற்பத்தியாளர்கள் தயாராகி வந்தனர், ஆனால் இது ஒழுங்குபடுத்தப்பட்ட துறை அல்ல என்பதால், தேவைகள் என்னவென்று செய்வது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

கேள்வி: உற்பத்தியாளர்களுக்குத் தேவையான இந்த விவரக்குறிப்புகளை அரசாங்கம் எப்போது வெளியிட்டது?

சஞ்சீவ்: ஊரடங்குகாரணமாக உற்பத்தியாளர்கள் பின்பற்ற வழி முறைகள் குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள வழிமுறைகள் சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கிறது.

கேள்வி: ஊரடங்கி போது தயாரிப்பது கூட ஒரு சிக்கல் என்று சொல்கிறீர்களா?

சஞ்சீவ்: நிச்சயமாக, ஆம்.

எங்களிடம் சுமார் 20 உற்பத்தியாளர்கள், நோய் தடுப்பு உடைகளை தயாரிக்க ஸ்டாண்டர்ட் டிசைன்களுடன் தயாராக இருந்தனர். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபடாம்ல் இருந்தால், ஒரு நாளைக்கு 25,000 பிபிஇ கருவிகளை தயாரித்து அளித்திருப்பார்கள். ஊரடங்கு உத்தரவால், நோய் தடுப்பு ஆடை தயாரிப்பு நிறுவனங்களின் சந்திக்கும் பிரச்சினைகள் மிகவும் அதிகரித்தது.

மேலும், நிறைய கூறுகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, எங்களுக்கு தயாரிப்புகளை வெளியிட அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதி கிடைக்கும் போது தான், எங்கள் தயாரிப்புகளை சிறப்பாக தயாரித்து வெளியிட முடியும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கு போது, பல அனுமதிகளைப் பெறுவது மிகவும் கடினமாக இருந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

கேள்வி: இந்த பிரச்சினையில் அரசாங்கம் உங்களுக்கு உதவியதா?

சஞ்சீவ்: மத்திய அரசு எங்கள் பிரச்சினைகளைக் கேட்டு, திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களைக் கொண்டு வந்துள்ளது. அவர்கள் நிச்சயமாக எங்களுக்கு உதவுகிறார்கள். ஆனால் உள்ளூர் நிர்வாக மட்டத்தில், இன்னும் நிறைய பிரச்சினைகள் உள்ளன. உதாரணமாக, தேவையான பாஸைப் பெறுவதற்கு, நான் உள்ளூர் நிர்வாகிகளிடம் செல்ல வேண்டியிருக்கிறது. அப்படி செல்லும் போது, காவலர்களால் தடுத்து நிறுத்தப்படுகிறோம் என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார்.

கேள்வி: ஊரடங்கு உத்தரவின் போது நோய் தடுப்பு ஆடைகளை தயாரிக்கும் பணிகளில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று நீங்கள் கூறுகிறீர்களா?

சஞ்சிவ்: உண்மை தான்.

மார்ச் 20 வரை, இதுபோன்ற நிலைமை இல்லை. நோய் தடுப்பு ஆடைகளை வாங்க விரும்புவர்களுக்கு, அதே போன்ற ஒரு ஆடை மட்டுமே வழங்கப்படுகிறது. அதாவது, கவுன் மற்றும் கையுறை போன்றவைகள். மார்ச் 24 அன்று வெளியான வழிகாட்டுதல்களுக்கு பின்னர் உற்பத்தியாளர்கள் அளித்த பதிலில், இந்த வழிகாட்டுதலின் பேரில் எங்களால் வழங்க முடியாது என்று கூறியுள்ளனர்.

கேள்வி: மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் என்ன சொல்கின்றன?

சஞ்சீவ்: உங்கள் துணி மற்றும் ஆடையின் இறுதி வடிவம் இரண்டையும் நீங்கள் சோதிக்க வேண்டும். உற்பத்தியாளர்களுக்கு தினசரி அடிப்படையில் இந்த வகையான துணி தேவையில்லை என்பதால், அவர்களில் 90% பேர் அதை கையிருப்பில் வைத்திருக்கவில்லை. எனவே இப்போது, அவர்கள் தங்கள் துணி உற்பத்தியாளர்களைக் கோர வேண்டும். மேலும், உற்பத்தியாளர்கள் அதை உடனடியாக மொத்தமாக வாங்க மாட்டார்கள். எனவே, அவர்கள் முதலில் ஒரு மாதிரியைக் கேட்டு, பின்னர் துணி மற்றும் ஆடை இரண்டையும் வெற்றிகரமாக சோதிக்க முற்படுவார்கள். இந்த ஆடைகள், திரவத்தை எதிர்க்கவும், செயற்கை இரத்த ஊடுருவல் சோதனையை கடந்து வருவது அவசியம் என்றும் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

இந்த வழிகாட்டுதலில் தற்போது தெளிவு இல்லை

கேள்வி: நோய் தடுப்பு ஆடை தயாரிப்பாளர்களுகாக மத்திய அரசு வெளியிட்டுள்ள இதுவரை தெளிவான விளக்கம் இல்லை என்று தெரிவிக்கிறீர்களா?

சஞ்சீவ்: இந்த ஆடை தயாரிப்பு பணியில் எத்தனை சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட வேண்டும் என்றும் அரசு தெளிவாக தெரிவிக்கவில்லை.

எங்கள் உற்பத்தி இலக்கு குறித்த நியாயமான யோசனையைப் அரசிடம் இருந்து பெற்று, மேலும் 10 நாட்களில் அந்த இலக்கை எங்களால் அடைய முயற்சி செய்வோம்.

கேள்வி: எனவே, இப்போதைக்கு, உங்களுக்கு இது குறித்து தெளிவு இல்லையா?

சஞ்சீவ்: அது தவறானது, ஆம். அது இருந்தால், நாம் இன்னும் ஒரு தீர்வைக் காணலாம்.

கேள்வி: இந்த நிலையில் நீங்கள்அரசாங்கத்தை எதிர்பார்க்கிறீர்களா?

சஞ்சீவ்: நிச்சயமாக, ஆம்.

கேள்வி: ஆனால் ஏன் தாமதம்?

சஞ்சீவ்: தாமதத்திற்கான காரணம் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். மார்ச் 5 ஆம் தேதி, 3 லட்சம் பிபிஇக்கள் தேவைபடுகிறது. இது மார்ச் 24 அன்று இது 10 லட்சம் பிபிஇகளாக அதிகரித்தது.

கேள்வி: பிபிஇக்கள் குறித்த மத்திய அரசு வழிகாட்டுதல்கள் வருவதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கு என்ன நடக்கும்? அவை இன்னும் தயாரிக்கப்படுகின்றனவா?

சஞ்சீவ்: எங்கள் உற்பத்தியாளர்களிடம் மருத்துவ தரமுள்ள, நெய்யப்படாத வகையிலான கவுன்கள் இருந்தால், ஆனால் வழிகாட்டுதல்கள் தேவைக்கேற்ப மாற்றி அமைக்க முயற்சிக்கிறோம்.

கேள்வி: எனவே, ஒரு வழியில், நீங்கள் அதை ஒரு வகையான ஜுகாத் என்று அழைக்கலாமா?

சஞ்சீவ்: இதை ஜுகாத் என்று ஏற்கனவே WHO மற்றும் CDC (அமெரிக்காவில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்) அறிவித்துள்ளது.இந்தியாவில் மட்டுமல்ல, பிபிஇ கருவிகளின் பற்றாக்குறை உலகெங்கிலும் உள்ளது.

மார்ச் 31 அன்று, மார்ச் 29 முதல், இந்தியாவில் இருந்து 90 டன் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் செர்பியாவில் இருந்து இறகுமதி செய்யப்பட்டன என்பது குறித்து விளக்குமாறு கேட்டு கொண்டுள்ளது.

செர்பியாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (யுஎன்டிபி) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதில் 90 டன் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களுடன் இரண்டாவது சரக்கு போயிங் 747 இன்று இந்தியாவில் இருந்து பெல்கிரேடிற்கு தரையிறங்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளால் குறித்த கவலைகள் மற்றும் குழப்பங்கள் தொடர்ந்தாலும், பிபிஇக்களின் பற்றாக்குறையை சமாளிக்க அவர்கள் அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக இந்திய மருத்துவ சாதன தொழில் சங்கம் (ஐஐஎம்) மற்றும் இந்திய தடுப்பு உடைகள் உற்பத்தியாளர்கள் சங்கம் (பிடபிள்யூஎம்ஐஐ) கூறுகின்றன.