பாக்கிஸ்தன் வரலாற்றிலேயே முதல் முறையாக வாக்களித்த பெண்கள்

பாக்கிஸ்தன் வரலாற்றிலேயே டைர் பகுதியை சேர்ந்த பெண்கள் முதல் முறையாக வாக்களித்துள்ளனர். டைர், கொஹிஸ்தான், வட மற்றும் தென் வஜிர்ஸ்தானை சேர்ந்த பெண்கள் புதன்கிழமை நடைபெற்ற பொது தேர்தலில் முதல் முறையாக வாக்களித்துள்ளனர்.

women

டைர் பகுதியில் உள்ள பெண்கள் முதல் முறையாக வாக்களித்ததை பாக்கிஸ்தானின் தேர்தல் ஆணையரான பாபர் யகூப் உறுதிப்படுத்தியுள்ளார். பழங்குடியின மக்கள் வசிக்கும் பேய்ஜய் மாவட்டத்தில் பெண்கள் வாக்களிக்கும் புகைப்படத்தை ட்ரிபூன்ஸ் கைபர் பக்துன்குவா அமைப்பின் தலைவரான இஃப்திகர் பிர்தௌஸ் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். ஆஃப்கன் எல்லைக்கு கிட்டத்தட்ட 5கி.மீ. தொலைவில் உள்ள மொஹ்மத் பகுதியை சேர்ந்த பெண்கள் முதல் முறையாக வாக்களிக்க வந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு வஜிரிஸ்தானை சேர்ந்த அரசு அதிகாரியான மொஹ்மத் அயாஸ் கான், “ பழங்குடியின பெண்கள் முதல் முறையாக வாக்களித்துள்ளனர். இன்று நாங்கள் வரலாற்றை படைத்துள்ளோம். இன்று பெண்கள் வாக்களிப்பதற்காக தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்துள்ளனர்” என்று கூறினார்.

pakistan

தெற்கு வஜிரிஸ்தானை சேர்ந்த உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ பெண்கள் அமைதியான முறையில் வாக்களித்தனர். ஆரோக்கியமான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றன. இதுவரை எந்தவித புகாரும் பதிவு செய்யவில்லை” என்று தெரிவித்தார். பதின் மற்றும் மிதி பகுதிகளில் அதிக அளவிலான பெண்கள் வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள பெண் வாக்காளர்களில் பத்து சதவிகிதத்திற்கும் குறைவான பெண்கள் வாக்களித்து வந்த நிலை தற்போது மாறத் தொடங்கியுள்ளது. வீடுகளை விட்டு பெண்கள் வெளியே வந்து தங்களின் வாக்குக்களை பதிவு செய்வது பழமைவாய்ந்த பகுதிகளின் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

pakistani-women

பாக்கிஸ்தானில் உள்ள 272 தொகுதிகளுக்கு பொதுதேர்தல் நடத்தப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு வாக்கு பதிவு நிறைவடைந்தது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (பி.எம்.எல்.), முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி (பி.டி.ஐ.), முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பி.பி.பி.) ஆகிய கட்சிகள் இந்தத் தேர்தலில் நாடு முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மும்பைத் தாக்குதலுக்குக் காரணமாக இருந்த ஹபீஸ் சயித்தின் ஜமாத் உத் தவா கட்சியும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது.

மொத்தம் உள்ளா 8,508 இடங்களில் 2,44,687 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இம்முறை அதிக அளவிலான பெண்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.