கட்சியை அடிமட்டத்தில் இருந்து ஒழுங்குபடுத்த திட்டம்: கர்நாடகா காங். கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் கருத்து

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரசை ஒழுங்குபடுத்தி, மீண்டும் கட்டி எழுப்பும் முயற்சியில் ஈடுபட இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவக்குமார் கூறி இருக்கிறார்.

கடந்த டிசம்பரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மோசமாக தோற்றது. அப்போது கர்நாடக காங்கிரஸ் தலைவராக இருந்தவர் தினேஷ் குண்டு ராவ்.

இதையடுத்து, அவருக்கு பதிலாக, டி.கே.சிவகுமார் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். சதீஷ் ஜார்கிஹோலி மற்றும் சலீம் அகமது ஆகியோரும் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

தேசத்தில் நடந்து வரும் அரசியல் மாற்றங்கள் குறித்து புதிய தலைவரான டி.கே. சிவக்குமார் கூறுகையில், நாட்டின் அரசியல் வரைபடத்தை மாற்ற பாஜக மிகச் சிறந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.