டில்லியிலேயே வீரமரணம் அடைய தயார்! அய்யாகண்ணு  

டில்லி:

லைநகர் டில்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று  28வது நாளாக தொடர்ந்து வருகிறது.

பல்வேறு வகையான போராட்டங்களை அரை நிர்வாண நிலையில் முன்னெடுத்து வரும் தமிழக விவசாயிகள், இன்று திடீரென நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக விவசாயிகளின் நிர்வாண போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இன்றைய நிர்வாண போராட்டம் குறித்து விவசாயிகள் சங்க தலைவர் அய்யா கண்ணு கூறியதாவது,

விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு காது கொடுத்து கேட்பதில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், . கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த  28 நாட்களாக டில்லியில் போராடி வரும் தங்களை பிரதமர் சந்திக்க மறுப்பது ஏன்? என்றும்,

பிரதமரை சந்திக்க அனுமதிப்பதாக கூறி அவரது அலுவலகத்திற்கு அழைத்து சென்று விட்டு, பின்னர் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி தங்களை அதிகாரிகள் ஏமாற்றி விட்டதாகவும், இதன் காரணமாகவே, விரக்தியின் உச்சத்தில் இருந்த தாங்கள் நிர்வாணமாக ஓடியுஙம், தரையில் புரண்டும்  போராட்டம் நடத்தினோம் என்றார்.

தமிழக விவசாயிகளை  மத்திய  அரசு நிர்வாணமாக்கிவிட்டதாகவும்,  தங்களது கோரிக்கைகளை சிறிதும் காது கொடுத்தும் கேட்காமல் உள்ள மத்திய அரசு, விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிக்க பார்க்கிறதா என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும்,  தங்களது  கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும், அதற்காக டில்லி ஜந்தர் மந்தரிலேயே வீரமரணம் அடையவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

நாங்கள் உயிரை விட்டால் தான் அரசு விவசாயிகளை கவனிக்கும் என்றால் அதற்கும் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.