நாம் அனைவரும் பரஸ்பர நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்! அயோத்தி தீர்ப்பு குறித்து ராகுல்காந்தி

டெல்லி:

யோத்தி விவகாரத்தில் உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்றுள்ள ராகுல்காந்தி, நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பர நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

அயோத்தி வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.  சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம், இந்துக்களுக்கு சொந்தமானது என்றும், அதில்  ராமர் கோயில் கட்டலாம், என்றும், இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை வேறு இடத்தில் மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள வயநாடு எம்.பி. ராகுல்காந்தி,  அயோத்தி விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து அனைவரும் நல்லிணக்கத்தை பேண வேண்டும், நீதிமன்றத்தின் இந்த முடிவை மதித்து நடக்க வேண்டும்.  நாம் அனைவரும்  இந்தியன் என்ற நோக்கில் சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் அன்புக்கான  நேரம் என்றும் இது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: AyodhaVerdict, It is a time of brotherhood, RahulGandhi, supremecourt, we should all work towards mutual harmony, ராகுல் காந்தி
-=-