இஸ்லாமியர்களையும் மற்ற சிறுபான்மையினரையும் ஆதரிக்க வேண்டும் : சுந்தர் பிச்சை

நியூயார்க்

ஸ்லாமியர்களுக்கும் மற்ற சிறுபான்மையினருக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் இந்தியாவைச் சேர்ந்தவரும் கூகுள் நிறுவன தலைமை அதிகாரியுமான சுந்தர் பிச்சை கூறி உள்ளார்.

இஸ்லாமியர்களை அமெரிக்காவில் குடியேறக்கூடாது என அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தடை விதித்துள்ளார்.   இது உலகெங்கும் கடும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.   இஸ்லாமிய நாட்டினர் மட்டுமின்றி இஸ்லாமியர் அல்லாதோரும் இதுகுறித்து டிரம்புக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முகநூல் முதன்மை அதிகாரி மார்க் சுபர்பெர்க், இஸ்லாமியர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.  அத்துடன் அவர் இஸ்லாமியர்களின் உரிமைக்காகவும் அவர்களது அமைதியான மற்றும் பாதுகாப்புக்கான வாழ்வுக்காக தொடர்ந்து தமது சமூக வலைத் தளம் போராட உள்ளதாகவும் தெரிவித்தார்.

கூகுள் நிறுவன தலைமை அதிகாரியும் இந்தியாவைச் சேர்ந்தவருமான சுந்தர் பிச்சை இது குறித்து, “டொனால்ட் டிரம்ப் இஸ்லாமியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டேன் என்றது அவரது சகிப்புத் தன்மை இன்மையைக் காட்டுகிறது.    இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து சிறுபான்மையினருக்கும் ஆதரவு அளிக்க வேண்டும்.

இஸ்லாமியர்களில் பலர் எவ்வித தாக்குதலிலும் கலந்துக் கொள்ளாமல் உள்ளனர். அவர்களைக் காப்பாற்றுவது உலகில் உள்ள அனைவரின் பொறுப்பாகும்.  நாம் இங்கு வரும் முன்பே அமெரிக்காவுக்குப் பலர் வந்துள்ளனர்.  இதை டிரம்ப் மனதில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Ban on muslims, Condemend, donald trump, Patrikaidotcom, sundar pitchai, tamil news, US, அமெரிக்கா, இஸ்லாமியர் தடை, கண்டன்ம், சுந்தர் பிச்சை, டிரம்ப்
-=-