மதசார்பின்மையை நிலைநிறுத்த இணைந்து போராடுவோம்….ராகுல்காந்திக்கு ஸ்டாலின் அழைப்பு

சென்னை:

திமுக தலைவராக ஸ்டாலின் இன்று தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அவரது வாழ்த்து செய்தியில்,‘‘திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள், அரசியல் பயணத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள அவருக்கு வெற்றியும், மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துக்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்து டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி, மதசார்பின்மையை நிலை நிறுத்த நாம் இணைந்து போராட வேண்டும்’’ என்றார்.